1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 15 ஜூன் 2024 (07:14 IST)

இளையராஜா கமலுக்குதான் நல்ல பாடல்களைக் கொடுத்தார்… அதுக்குக் காரணம்- அமெரிக்காவில் ரஜினி பேச்சு!

தமிழ் சினிமாவின் தனிச்சிறப்பு பெற்ற கலைஞர்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர் தன்னுடைய 81 ஆவது வயதில் இப்பொதும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது சிம்ஃபொனியை எழுதி முடித்துள்ளார்.

அவர் தன்னுடைய உச்சபட்ச படைப்புத்திறனை 80 களில் வெளிப்படுத்திய போது ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் முன்னணி நடிகர்களாக இருந்தார்கள். அவர்கள் இருவரின் மிகப்பெரிய வெற்றிக்கு இளையராஜாவின் அற்புதமான பாடல்களும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களின் படங்களில் இளையராஜா இடம்பெறாமல் புதுப்புது இசையமைப்பாளர்கள் வர ஆரம்பித்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள ரஜினிகாந்த் “இளையராஜா என்னைவிட கமல்ஹாசனுக்குதான் நல்ல நல்ல பாடல்களைப் போட்டுள்ளார். முதலில் எனக்கும் சில நல்ல பாடல்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் கொடி அப்படியே கமல் பக்கம் சாய்ந்துவிட்டது. அதற்குக் காரணம் கமல்தான்.  அவர் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்தார்.” எனப் பேசியுள்ளார். இதே கருத்தை அவர் முன்பொரு முறை இளையராஜா மேடையிலேயே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.