போடு.. ஆட்டம் போடு.. நம்ம தடுக்க எவனும் இல்ல! – இந்திய அணியின் வைரல் டான்ஸ்!
ஜிம்பாப்வே அணி உடனான ஒருநாள் தொடரை இந்தியா வென்ற நிலையில் இந்திய வீரர்கள் டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கி நடந்து வந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் ஜிம்பாப்வேவை வென்று வொயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இருந்தது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் 50 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களை குவித்த இந்திய அணி அடுத்ததாக களமிறங்கிய ஜிம்பாப்வேவை 49.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 276 ரன்களில் மண்ணை கவ்வ செய்தது. 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணியை அதன் சொந்த மண்ணிலேயே இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்தி பாடலுக்கு நடனமாடி இந்திய அணி வீரர்கள் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.