1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today corona cases in India

8 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்பு; 84 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

India Corona Cases
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்த பாதிப்புகள் மீண்டும் மெல்ல குறைந்து வருகிறது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 8,586 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,43,57,546 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,27,416 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,37,33,624 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 96,506 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பிஞ்சு கத்தரிக்காய் உண்பதால் அலர்ஜி ஏற்படுமா?