1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (19:06 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம்

india team
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சகளாக் ரிலையன்ஸ் குழுமத்தின் CAMPA  நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் முக்கிய அணியான இந்திய கிரிக்கெட் அணி திகழ்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல அணிகள் இருந்தாலும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் திறமையால் வலுவான நிலையில்  உள்ளது.

இந்த நிலையில், உலகில் செல்வாக்கு மிக்க மற்றும் அதிக மதிப்பு வாய்ந்த கிரிக்கெட் போர்டாக இந்திய கிரிக்கெட் போர்ட் உள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர்ஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தின் CAMPA நிறுவனம் மற்றும் ATOMBERG நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது