2024 ஆம் ஆண்டில் மூன்றே மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடும் இந்திய அணி… ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் மூத்த வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி முக்கியமான தொடர்களை இழந்து வருகிறது.
இந்நிலையில் இப்போது 2024 ஆம் ஆண்டு இந்திய அணி விளையாடவுள்ள தொடர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி இந்திய அணி இந்த ஆண்டில் மூன்றே மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது. ஜூலை மாதத்தில் இலங்கைக்கு செல்லும் இந்திய அணி அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
வரும் ஆண்டுகளில் டி 20 உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற முக்கியமான தொடர்கள் உள்ளதால் இந்த ஆண்டில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இது ஒருநாள் போட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.