1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. First test defeat.. Young bowler added to the Indian team

முதல் டெஸ்ட் தோல்வி.. இந்திய அணியில் இளம் பந்து வீச்சாளர் சேர்ப்பு!

Avesh Khan
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் சுற்று பயண போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் அணியில் புதிய வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.



இந்தியா – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதலில் நடந்த டி20 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்ததால் டிராவில் முடிந்தது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வென்றது இந்தியா.

அதை தொடர்ந்து தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் இளம் பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். ஆவேஷ் கானின் அபாரமான பந்து வீச்சு இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டை வெல்ல உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இலங்கை டி 20 கிரிக்கெட் அணிக்கு இவர்தான் புதிய கேப்டன்!