திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (20:16 IST)

மேட்ச் இல்லையாம் வாங்க படத்துக்கு போவோம் – லண்டனில் ரகளை செய்யும் இந்திய கிரிக்கெட் அணி

இன்று நடக்கவிருந்த இந்தியா நியூஸிலாந்து போட்டிகள் ரத்தாகிவிட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் படத்துக்கு போய்விட்டு வந்த போட்டோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

உலக கோப்பை தொடருக்காக லண்டன் சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி மற்றும் ஆட்டம் போக மீத நேரங்களில் லண்டனை ஜாலியாக சுற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று போட்டிகள் நடக்கவிருக்க நேற்று நம்மாட்கள் சல்மான்கான் நடித்த ‘பாரத்’ திரைப்படத்தை பார்க்க போயிருக்கிறார்கள். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ். நாம்தான் மேட்ச் பார்க்க முடியலை அவர்களாவது ஜாலியா சினிமா போய்ட்டு வரட்டும் என ரசிகர்கள் மனதை ஆறுதல்படுத்திக் கொள்கிறார்கள்.