திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 6 ஜூன் 2019 (17:57 IST)

செக்யூரிட்டியை அறைந்த சல்மான்கான் – வெளியானது சர்ச்சை வீடியோ

தனது பாதுகாவலாக வந்த செக்யூரிட்டியை ஹிந்தி நடிகர் சல்மான்கான் பொதுவெளியில் வைத்து அறைந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹிந்தி நடிகர் சல்மான்கான் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். முதன் முதலாக மானை சுட்டு கொன்ற வழக்கில் இவர் கைதானது இந்தியா முழுவதும் பேசப்பட்டது. பிறகு இந்தி நடிகை கத்ரீனா கைஃபுடன் காதல், அவரை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஓங்கி அறைந்தது, குடித்துவிட்டு கார் ஓட்டி சென்று ப்ளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மேல் ஏற்றியது, செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை உடைத்தது என இவருடைய திரைப்படங்களை தாண்டி ரொம்ப பிரபலமாக எல்லாராலும் அறியப்பட்டவர்.

நேற்று சல்மான்கான், கத்ரீனா கைஃப், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்த ‘பாரத்’ படம் ரிலீஸானது. இதன் முதல் நாள் ஷோவை ரசிகர்களோடு ரசிகர்களாக பார்க்கலாம் என சல்மான்கான் ஒரு தியேட்டருக்கு சென்றுள்ளார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் கூட்டம் அவரோடு செல்பி எடுத்துகொள்ள குவிந்துவிட்டது. சல்மானுக்கு பாதுகாப்பாக வந்த செக்யூரிட்டிகள் அவர்களை விலக்கி வழி ஏற்படுத்தியவாறு சென்றனர். அப்போது ஒரு சின்ன குழந்தை சல்மான்கானை நோக்கி ஆட்டோகிராஃப் வாங்க வர அதை செக்யூரிட்டி எதிர்பாராதவிதமாக தள்ளிவிட்டு விட்டார். இதை பார்த்து கடுப்பான சல்மான்கான் உடனே ‘பளார்’ என்று அந்த செக்யூரிட்டியை அடித்துவிட்டார். இதை சுற்றியிருந்த ரசிகர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பலர் ஒரு குழந்தைக்காக செக்யூரிட்டியை அறைந்த சல்மானின் கருணை உள்ளத்தை மெய்ச்சினாலும், சிலர் செக்யூரிட்டி அவரது பாதுகாப்பிற்காகதானே அதை செய்தார். சல்மான் செய்தது தவறு என்றும் கூறிவருகின்றனர்.