அடித்து நொறுக்கிய இந்தியா.. அரண்ட இங்கிலாந்து! – இந்தியா அபார வெற்றி!

India
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (12:42 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இங்கிலாந்து அணி தனது பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எல்லாம் இழந்து வந்தது.

482 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வந்த இங்கிலாந்து அணியை பவுலிங்கால் பதம் பார்த்த இந்திய அணி 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. இதனால் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டெஸ்ட்டை வென்றுள்ளது.

அதிகபட்சமாக அக்சர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதனால் இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடர் 1-1 என்ற நிலையில் உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :