ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (10:09 IST)

இந்தியாவால் ஆபத்து; பதறிப்போன அமெரிக்கா: விவரம் உள்ளே...

இந்தியாவின் டேட்டா லோக்கலிசேசன் பாலிசி அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்ர காரணத்தால் அமெரிக்க எம்.பி.க்கள் இந்த பாலிசியை தளர்க்கும்படி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 
 
இந்த டேட்டா லோக்கலிசேசன் பாலிசியின்படி, இந்தியாவில் எல்லாவிதமான பண பட்டுவாடா தொடர்பான தகவல்களையும் உள்நாட்டு சர்வரில்தான் சேமித்து வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால், அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் மாஸ்டர் கார்டு, விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகின்றன. 
 
எனவே இந்த பாலிசியை தளர்த்துமாறு மோடிக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை எம்.பி.க்கள் கடிதம் எழுதி உள்ளனர். ஆனால், இது குறித்து மோடி தலைமையிலான அரசு என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை.