திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (18:35 IST)

கடைசி ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?

இந்திய-இலங்கை அணிகளுக்கிடையேயான கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.


 
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது இதில் 3 டெஸ்ட் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில்,இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன.

இந்த நிலையில்  இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை(17) நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி தொடரை கைப்பற்றுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதே சமயம் இலங்கை அணியும் இதே நோக்கத்தோடு கடுமையாக போராடுவார்கள். இதனால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.