திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2023 (11:11 IST)

இதுவரை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதல் விவரம்.. ஆசியக் கோப்பையில் யார் கெத்து?

ஆசியக் கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹை வோல்டேஜ் போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்க உள்ளது.

இதுவரை ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 13 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 7 முறையும் பாகிஸ்தான் அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு தெரியாமல் கைவிடப்பட்டுள்ளது.

கடைசியாக மோதிய 5 முறைகளில் இந்திய அணி 4 முறை வென்றுள்ளது. இதனால் ஆசியக் கோப்பைகள் வரலாற்றில் இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது. இது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.