வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (20:47 IST)

திருமணத்தில் நாற்காலிகளை வீசி சண்டை போட்ட உறவினர்கள்

pakistan
திருமணத்தில்  நாற்காலிகளை வீசி  உறவினர்கள் சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இங்குள்ள  ஒரு பகுதியில் கடந்த 24 ஆம் தேதி திருமண விருந்து நடைபெற்றுள்ளது.

அப்போது, மணப்பெண் மற்றும் மணமகள் வீட்டிலிருந்து  உறவினர்கள்  பலர் திருமண விருந்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

திருமண விருந்தில் உறவினர்கள் அமர்ந்து உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ஒருவரை ஒருவர் திடீரென்று தாக்கிக் கொண்டனர். பின்னர், அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து வீசி தாக்கினர்.

இந்த மோதல் தீவிரமடைந்த நிலையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
திருமணத்தின்போது இப்படி சண்டையிட்டுக் கொண்டது ஏன்? எதற்கு என்பது தெரியவில்லை.  ஆனால், இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.