தொடர்புடைய செய்திகள்
- மூன்று வடிவிலானக் கிரிக்கெட்டிலும் அபாயமான வீரர்… பண்ட்டைப் பாராட்டிய இங்கிலாந்து கேப்டன்!
- கேப்டன் கூல் என்ற வார்த்தைக்கு ‘ட்ரேட் மார்க்’ விண்ணப்பித்த தோனி!
- இந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் இருக்க மாட்டார்களா?... பின்னணி என்ன?
- ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!
- சூர்யகுமார் யாதவ்வுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ அறுவை சிகிச்சை…!
ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி… தேதி பற்றி வெளியான தகவல்!
ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடரை நடத்தி வருகிறது, ஆசியக் கிரிக்கெட் கவுன்சில், இந்நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை தொடர் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இதனால் இந்த ஆண்டு கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஆசியக் கோப்பை தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவர்கள் சமீபத்தில் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 20 ஆம் தேதி நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.