தொடர்புடைய செய்திகள்
- சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை விபத்து.. சம்பவ இடத்தில் 5 பேர் பலி..!
- தானம் செய்யப்பட்ட பெட்டியில் இருந்து ஆடையை எடுக்க முயன்ற பெண் பரிதாப பலி.. என்ன நடந்தது?
- ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!
- அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட நாசவேலையா? ப்ளாக் பாக்ஸில் இருந்தது என்ன? - ஒன்றிய அமைச்சர் பரபரப்பு தகவல்!
- என்னால் திரும்ப விளையாட முடியுமா?... விபத்துக்குப் பின் பண்ட் கேட்ட முதல் கேள்வி- மருத்துவர் பகிர்ந்த தகவல்!
மூன்று வடிவிலானக் கிரிக்கெட்டிலும் அபாயமான வீரர்… பண்ட்டைப் பாராட்டிய இங்கிலாந்து கேப்டன்!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இதில் அவருக்கு நெற்றி மற்றும் கால் ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்த அவர் ஒரு ஆண்டுகாலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்தார்.
அதன் பின்னர் குணமாகி சர்வதேசக் கிரிக்கெட்டுக்குத் திரும்பியுள்ள அவர் பழைய படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், தற்போது இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரிஷப் பண்ட்டை புகழ்ந்து பேசியுள்ளார். அதில் “எதிரணி வீரராக இருந்தாலும் ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கை நான் ரசித்துப் பார்ப்பேன். 3 வடிவிலான போட்டிகளிலும் அவர் பேட்டிங் எனக்குப் பிடிக்கும். கிரிக்கெட்டின் அபாயகரமான வீரர்களில் அவரும் ஒருவர்.” எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.