1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India vs Australia fourth t 20 match today at raipur

இன்று நான்காவது டி 20 போட்டி… தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா
இந்தியாவில் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளிலுமே முக்கிய வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்கள் மட்டுமே விளையாடினாலும், இதுவரை நடந்த போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக அமைந்தன.

இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளையும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியையும் வென்றுள்ளது. இன்று நான்காவது போட்டி ராய்ப்பூரில் நடக்க உள்ளது.

இந்நிலையில் கடந்த 3 போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் ஐயர் இன்றைய போட்டியில் களம் காண்கிறார். அதனால் அவருக்காக எந்த வீரர் பென்ச்சில் உட்காரவைக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் கிளன் மேக்ஸ்வெல் தாயகம் திரும்பியுள்ளதால் அந்த அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டியை இந்திய அணி வென்றால் தொடரை வெல்லும் என்பதால் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
கோலி 2031 உலகக் கோப்பையில் கூட விளையாடுவார்… டேவிட் வார்னர் கருத்து!