1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (21:24 IST)

IND vs SA- ODI போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு

Indian Team
தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய  ஒரு நாள் அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ள்து.

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டிசம்பர் 10 முதல் 21 வரை நடக்க உள்ள ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளுக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்  தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய  ஒரு நாள் அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ள்து.

இதில், ருதுராஜ், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஷ் அய்யர்,கே எல் ராகுல்(கேப்டன்),  சஞ்சு சாம்சன், அக்சர், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், ஆவேஷ் கான், ஆர்ஷ்தீவ் சிங், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில், உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம்  தோல்வியடைந்த நிலையில், கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி இத்தொடரை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.