1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 17 ஜனவரி 2024 (13:53 IST)

பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய நியுசிலாந்தின் ஃபின் ஆலன்!

நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் சமீபத்தில் நடந்த மூன்றாவது டி 20 தொடரில் நியுசிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.  3-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்து 224 ரன்கள் சேர்த்தது.

இந்த போட்டியில் நியூஸிலாந்து வீரர் ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பவுண்டரிகள் 16 சிக்சர்களுடன் 137 ரன்கள் சேர்த்து அசத்தினார். இவர் பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் அனைவரையும் விளாசி தள்ளினர். இதன் மூலம் அதிக ரன்கள் சேர்த்த நியுசிலாந்து வீரர் என்ற சாதனையை டி 20 போட்டிகளில் பின் ஆலன் படைத்துள்ளார்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 179 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்த தொடரை பாகிஸ்தான் அணி இழந்துள்ளது. ஷாகீன் அப்ரிடியின் முதல் கேப்டன்சி சீரிஸே தோல்வியில் முடிந்துள்ளது.