திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:02 IST)

இந்தியா – பாகிஸ்தான் டி20 போட்டி! – 5 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2022ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்க உள்ளது. மெல்போர்ன், சிட்னி, ப்ரிஸ்பன் உள்ளிட்ட 7 இடங்களில் 45 போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளில் அக்டோபர் 23 அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளை காண டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.