வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (10:56 IST)

காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து! – மன்னிப்பு கேட்டது கே.எஃப்.சி!

காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் கேஎப்சி வெளியிட்ட கருத்துக்கு கேஎப்சி தலைமை நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள உணவு நிறுவனங்களில் முக்கியமானது கேஎப்சி நிறுவனம். இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கேஎப்சி கிளை ஒன்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தது. அதற்கு பீட்ஸா ஹட் நிறுவனமும் ஆதரவு தெரிவித்து காஷ்மீர் ஒற்றுமை தினம் என பதிவிட்டிருந்தது.

இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கேஎப்சி, பீட்ஸா ஹட்டை புறக்கணிக்க வேண்டும் என ட்ரெண்டிங் வைரலானது. அதை தொடர்ந்து மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ள கேஎப்சி “சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கருத்து மன்னிக்கக் கூடியது அல்ல. அதை ஆதரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ இல்லை. நாங்கள் மீண்டும் பெருமையோடு அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது.

முன்னதகா ஹூண்டாய் நிறுவனமும் இவ்வாறாக பதிவிட்டு எதிர்ப்பை சந்தித்து பின் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.