3 விக்கெட் இழப்புடன் இந்தியா நிதான பேட்டிங்...

Last Modified புதன், 21 பிப்ரவரி 2018 (22:06 IST)
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. 
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டில் அடைந்த தோல்வியை ஒருநாள் போட்டியின் வெற்றியின் மூலம் ஈடுகட்டியது இந்திய அணி. 
 
நடந்து முடிந்த முதல் டி-20 போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி ஃப்ல்டிங் தேர்வு செய்தது. 
 
தவான் மற்றும் ரோகித் சர்மா தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானார். இதன் பின்னர் ரெய்னா களமிரங்கினார். தவான், ரெய்னா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த நிலையில், தவான் அவுட்டானார். 
 
அதன் பின்ன வந்த கோலி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். தற்போது பாண்டே மற்றும் ரெய்னா களத்தில் உள்ளனர். இந்திய அணி 7 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் குவித்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :