செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated: புதன், 12 ஜனவரி 2022 (15:57 IST)

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்… சிறப்பான தொடக்கம் கொடுத்த பூம்ரா & ஷமி!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி 79 ரன்கள் அடித்திருந்தார் என்பதும் புஜாரே 43 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து முதல்நாளில் 17 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்தது. இன்று தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி மேலும் இரண்டு விக்கெட்களை இழந்துள்ளது. தற்போது வரை 62 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. இன்று அடுத்தடுத்து இரு விக்கெட்களை எடுத்துக் கொடுத்து ஷமியும் பூம்ராவும் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.