திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (13:44 IST)

பெண்கள் கிரிக்கெட் அம்பாசிட்டராக கீர்த்தி சுரேஷ் நியமனம்

keerthy suresh
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்  நடிகை கீர்த்தி சுரேஷ்.

சிவகார்த்திகேயனுடன் ‘ரெமோ’, ‘ரஜினி முருகன்’,  ரஜினியுடன் ‘அண்ணாத்த’, விஜய்யுடன் ‘சர்க்கார்’, ‘பைரவா’, சூர்யாவுடன் ‘தானா சேர்த்த கூட்டம்’,  ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் அவர் நடித்த மகாநடி படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தசரா. போலோ சங்கர், சர்க்காரு வாரி பட்டா ஆகிய படங்கள் வெளியானது.

இந்நிலையில் சினிமாவில் நுழைந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கீர்த்தி சுரேஷ் தன் தொடக்க காலம் முதல் இப்போது வரை உதவிய  மற்றும் உடன் பயணித்த அனைவருக்கும் நன்றி கூறி ஒரு  பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், கேரளம் மாநில மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரதிநிதியாக (அம்பாசிட்டர்) நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.