திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 4 மார்ச் 2024 (08:12 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்… முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியா!

2023-2025 ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஸஸ் தொடரில் இருந்து தொடங்கியது. இப்போது பாதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்தியா –இங்கிலாந்து தொடர் மற்றும் ஆஸ்திரேலியா நியுசிலாந்து தொடர் நடந்து வரும் வேளையில் புள்ளிப்பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதே நேரத்தில் நியுசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

இதனால் முதலிடத்தில் இருந்த நியுசிலாந்து அணி தற்போது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்டையும் வெல்லும் பொருட்டு இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கும் வாய்ப்புள்ளது.