1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:25 IST)

இந்தியா ஆஸ்திரேலியா தொடரை இலவசமாக ஒளிபரப்பும் ஜியோ சினிமா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் உலகக் கோப்பைக்கு முன்னர் நடக்க உள்ள நிலையில் மிகவும் முக்கியத்துவம் உள்ள தொடராக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரை இந்தியாவில் வயாகாம் 18 நிறுவனம் ஒளிபரப்புகிறது. இந்த தொடரை ஜியோ சினிமாஸ் நிறுவனம் 11 மொழிகளில் இலவசமாக வழங்குகிறது.

இந்த தொடருக்காக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரின் இறுதி போட்டியில் பாட் கம்மின்ஸ் காயமடைந்தார். அதனால் இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.