திங்கள், 20 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2024 (08:31 IST)

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி வரும் நிலையில் நேற்று அணியின் செயல்பாடு கச்சிதமாக இருந்தது. எந்தவொரு குறையும் சொல்ல முடியாத அளவுக்கு விளையாடி இங்கிலாந்து அணியிடம் 2022 ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்த்துள்ளது.

இந்திய அணி இதுவரை இந்த தொடரில் எந்த அணியிடமும் தோல்வியே பெறவில்லை. லீக் போட்டிகளில் மழை காரணமாக ஒரு போட்டியின் முடிவு மட்டும் தெரியவில்லை. சூப்பர் 8 சுற்றிலும் அனைத்து போட்டிகளிலும் வென்று, தற்போது அரையிறுதியையும் வென்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

இதே போலதான் தென்னாப்பிரிக்கா அணியும், இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திககாத அணியாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி தோல்வியே சந்திக்காத இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறை.