1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2024 (08:09 IST)

எமோஷனல் ஆன ரோஹித் ஷர்மா… ஆறுதல் படுத்திய கோலி- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து வீழத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

அதையடுத்து இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாறி விக்கெட்களை இழந்தது. இந்திய பவுலர்கள் அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் அபார பந்துவீசி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் இந்திய அணி இங்கிலாந்து அணியை 103 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு மிக எளிதாக சென்றது.

இந்த தொடரில் தோல்வியே காணாமல் இந்திய அணி இதுவரை விளையாடி வருகிறது. இந்த போட்டியின் வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா உணர்ச்சிவசப்பட்டு டிரஸ்ஸிங் கண்கலங்கி காணப்பட்டார். அப்போது அவரை மூத்த வீரரான கோலி அருகில் சென்று சாந்தப்படுத்தினார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.