1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India all out for 201 runs in first innings

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

இந்தியா
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.  இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்துள்ளது.  அந்த அணியின் கெனூரன் முத்துசாமி சிறப்பாக விளையாடி 101 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 58 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். தென்னாப்பிரிக்காவின் மார்க்கோ யான்சன் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்திய அணி 288 ரன்கள் பின்தங்கி இருந்தபோதும் ஃபாலோ ஆன் கொடுக்காமல் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடவுள்ளதாக தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!