வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (08:15 IST)

பிசிசிஐ கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல்… ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் முடிந்த பேச்சுவார்த்தை!

8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது மீண்டும் பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை ஏற்க மறுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று இலங்கையில் நடந்த ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கான பட்ஜெட்டாக 384 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிசிசிஐ வைத்த கோரிக்கையான ஹைபிரிட் மாடல் போட்டிகள் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என ஐசிசி உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது.