1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 20 ஜூலை 2024 (07:53 IST)

ஹர்திக் பாண்ட்யாவுக்கு இளம் வீரர்களிடம் ஆதரவில்லையா?... அதனால்தான் கேப்டன் பதவி கிடைக்கவில்லையா?

உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை நியமிக்க வேண்டும் எனப் புதுப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து டி 20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து இப்போது மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி காயம் ஏற்பட்டு அவதிப்படுகிறார். அதனால் அவர் கேப்டனாக இருந்தால் அணியில் குழப்பங்கள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. மேலும் அணியில் உள்ள சில இளம் வீரர்களிடம் ஹர்திக் மற்றும் சூர்யகுமார் கேப்டன்சி குறித்து கேள்வி எழுப்பியபோது அவர்கள் சூர்யகுமாருக்கே ஆதரவு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதனால்தான் ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.