RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?
18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இது சம்மந்தமான வழக்கை அணி நிர்வாகம் எதிர்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் பெங்களூர் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த அணியை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இங்கிலாந்தைச் சேர்ந்த டியாஜியோ நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம்தான் பெங்களூர் அணியை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் வரும் மார்ச் மாதத்திற்குள் அணியை விற்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியை வாங்க அதான் குழுமம் அதிக ஆர்வம் காட்டுவதாக சொல்லப்பட்டது.
இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக ஆர் சி பி அணியுடன் இணைந்து செயல்பட்டு வரும் கர்நாடகாவைச் சேர்ந்து தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் அணியின் பங்குதாரர்களில் ஒருவராக இணையும் முடிவை எடுத்து அதற்கானப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.