1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (09:19 IST)

200 வரை அடிப்பாங்க..! ஜெயிக்க போறது யாரு? – பஞ்சாப் Vs ராஜஸ்தான் மோதல்!

RR vs PKS
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2023 போட்டிகள் தொடங்கி லீக் சுற்றுகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள 8வது லீக் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன. இந்த சீசனில் முன்னதாக முதல் போட்டியில் வெவ்வேறு அணிகளுடன் மோதிய இந்த அணிகள் இரண்டுமே வெற்றி பெற்றுள்ளன. அதுவும் ராஜஸ்தான் அணி 203 ரன்களை குவித்து சன்ரைசர்ஸை 131க்கு வீழ்த்தியது. அதுபோல பஞ்சாப் அணியும் 191 ரன்கள் குவித்து 146க்கு கொல்கத்தாவை சாய்த்தது.

இரு அணிகளுமே முதல் பேட்டிங்கில் வெற்றி பெற்றதால் இன்று டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைதான் தேர்வு செய்ய விரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேஸிங்கில் விக்கெட்டை வீழ்த்துவது இரு அணிகளுக்கும் எளிதானதாக உள்ளது. ராஜஸ்தான் அணியில் படிக்கல், ஜோ ரூட், சஞ்சு சாம்சன், ஹெட்மயர், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பல பேர்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால் கடந்த ஆட்டத்தை போலவே 200+ ரன்கள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணி கேப்டனாக ஷிகர் தவான் இருக்கிறார். அதர்வா டைடே, ராஜபக்‌ஷே, ஹர்ப்ரீத் சிங், ஷாரூக்கான் உள்ளிட்ட பலரின் பங்களிப்பு போட்டிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K