தொடர்புடைய செய்திகள்
- உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் கிரிக்கெட் மைதானம் போன்ற கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்!
- இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி..! இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!!
- இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!
- சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா
என்னது லாராவோடு பாபர் ஆசாமை ஒப்பிடுவதா?... தொகுப்பாளரை அடிக்கப் பாய்ந்த ஹர்பஜன்!
நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றது. மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடமும் தோற்றது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த படுதோல்விக்கு பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையே காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் பாபர் ஆசாமின் கேப்டன்சியும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு சற்று முன்பாக அவர் திடீரென மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டது சர்ச்சைகளை எழுப்பியது.
இந்நிலையில் பாபர் ஆசாமை பிரையன் லாராவோடு ஒப்பிட்டு இதில் யார் சிறந்தவர் என ஒரு நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங்கிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்வியால் கடுப்பான ஹர்பஜன், தொகுப்பாளரை அடிக்க ஏதேனும் பொருட்கள் கிடைக்குமா என்று தேடினார். ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்த பழங்களை எடுத்துக் கொடுத்து “உங்களுக்கு சிறந்த அறிவு இருக்கிறது” எனப் போலியாக வாழ்த்துவது போல பேசியமர்ந்துவிட்டார்.