புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:22 IST)

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அவர் மனைவிக்கு கொரோனா தொற்று!

ஹர்பஜன் சிங் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சமீபத்தில் தனது சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் இப்போது அவர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி ‘லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பாஸ்ராவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.