திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (09:56 IST)

அஸ்வின், ஜடேஜா சேர்ந்தால் அணி முழுமையாகும்! – சுனில் கவாஸ்கர் கருத்து!

இந்தியா – நியூஸிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின், ஜடேஜா சேர்க்கப்பட வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. இதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை இந்தியா, நியூஸிலாந்து அணிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் “கடந்த சில நாட்களாக சவுத்தாம்ப்டனில் வெயில் விளாசிக் கொண்டிருப்பதால் பிட்ச் நன்றாக காய்ந்து போயிருக்கும். அதனால் சுழற்பந்து நன்றாக எடுபடும். இதன் காரணமாக இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா சேர்க்கப்பட வேண்டும். அஸ்வினும், ஜடேஜாவும் பேட்டிங்கிலும் அணியை வலுவாக்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.