திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (23:55 IST)

விவேகானந்தரின் தத்துவங்கள்

எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு  ஈடாகாது.
 
* வரம்பு கடந்த ஆற்றல் கொண்ட இறைவனை தூய்மையான மனதோடு பற்றிக் கொள்ளுங்கள். அவரைச் சார்ந்து நின்று வாழுங்கள். உங்களை வெல்ல யாராலும் முடியாது.
 
* கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பையும், உதவியையும், சேவையையும் மற்றவர்களுக்கு கொடுத்துப் பழகுங்கள். இதற்காக எதையும்  எதிர்பார்க்கவேண்டாம்.
 
* எதைப் பிறருக்கு கொடுக்கிறோமோ அது திரும்பவும் ஆயிரம் மடங்காக நம்மிடமே திரும்பிவிடும். ஆனால், இப்போதே அதைப்பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள்  செய்யவேண்டியது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்குக் கொடுப்பது மட்டுமே.
 
* கைகள் இருப்பது பிறருக்கு உதவி செய்யத் தான். பட்டினியாய்க் கிடந்தாலும் கடைசிப் பருக்கையையும் பிறருக்கு கொடுப்பது தான் நல்லது. கொடுப்பவன்  முழுமை பெற்று முடிவில் கடவுளாகிறான்.
 
* ஒருவருக்கு உதவி செய்ய எண்ணி, யாருடைய கை முன்னே நீளுகிறதோ, அவனே மக்களில் சிறந்தவன்.
 
\* பரந்த இந்த உலகத்தில், கிராமம் கிராமமாகச் சென்று மனிதகுலத்திற்கு நன்மை செய்வதை கடமையாகக் கொள்ளுங்கள். மற்றவர்களின் நன்மைக்காக  நரகத்திற்குக் கூடச் செல்ல தயாராகுங்கள்.
 
* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் ஆற்றலைச் சிதற விடாமல் அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான கடமைகளில்  அக்கறை காட்டுங்கள்.
 
* சேவை செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. தன் குழந்தைகளில் யாராவது ஒருவருக்கு உதவி செய்யும் வாய்ப்பை கடவுள் அளித்தால் அதன்  மூலம் நீங்கள் பாக்கியம் பெற்றவராகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
 
* நல்லவர்கள் உலகில் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலக வரலாறு எங்கும் காணமுடியும்.