1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

நான் டைம் டிராவல் செய்ய முடிந்தால் அதை மற்றும் மாற்றுவேன் – கவுதம் கம்பீர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆவது குறித்து பேசியு கம்பீர், “இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட பெரியது வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறேன். நான் பயிற்சியாளராக ஆனால் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். ” எனக் கூறியிருந்தார். இம்மாத இறுதியில் அவர் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் டைம் டிராவல் செய்தால் தன் வாழ்க்கையில் எதை மாற்றுவார் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நான் கடைசி வரை இருந்து ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். ஒரு வீரராக நான் இன்னொரு வீரரை முடிக்க விடாமல் நானே முடித்திருக்க வேண்டியது என் கடமை. அந்த வருத்தம் இப்போது வரை உள்ளது. கடந்த காலத்துக்கு சென்று என்னால் ஒரு விஷயத்தை மாற்ற முடியுமெனில், நான் அந்த போட்டிக்கு சென்று கடைசி வரை விளையாடுவேன்” எனக் கூறியுள்ளார்.