முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு கத்திக்குத்து


Abimukatheesh| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (17:15 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மாவின் தந்தையை, 2 வாலிபர்கள் கத்தியால் குத்தி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மாவின் தந்தை ஓம் பிரகாஷ் சர்மா மிட்டாய் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு 2 வாலிபர்கள் அவர் கடையில் குளிர்பானம் மற்றும் சிகரெட் வாங்கி சென்றுள்ளனர். பின்னர் இருவரும் திரும்ப வந்து ஓம் பிரகாஷை தாக்கியுள்ளனர். 
 
இதையடுத்து ஓம் பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
 
இரண்டு வாலிபர்களின் ஒருவர் என் பையில் இருந்த பணத்தை எடுக்க முயன்றான். நான் அதை தடுத்தேன். மற்றொருவன் கத்தியால் என் வயிற்றில் குத்தினான். பின் இருவரும் என் கடைக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.7000 பணத்தை எடுத்துச் சென்றனர். செல்லும் போது என்னை கடைக்குள் வைத்து பூட்டி விட்டு சென்றுவிட்டனர். பின் நான் எனது மகன் தீபக்கை அழைத்தேன். அவன் வந்து என்னை மருத்துவமனையில் சேர்ந்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
ஜோகிந்தர் சர்மா 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி விளையாடவில்லை. தற்போது இவர் ஹிசர் மாவட்ட  துணை போலீஸ் சூப்பிரெண்டாக உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :