செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 ஜூலை 2022 (15:36 IST)

ஆண் கிரிக்கெட்டர்களுக்கு இணையாக பெண் கிரிக்கெட்டர்களுக்கும் ஊதியம்… எந்த நாட்டில் தெரியுமா?

சர்வதேச கிரிக்கெட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் ஐசிசியால் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு இணையான ரசிகர்களோ பார்வையாளர் கூட்டமோ பெண்கள் கிரிக்கெட்டுக்கு இருப்பதில்லை. ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பெண்கள் கிரிக்கெட் மேலும் ரசிகர்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே முதல் முறையாக நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆண் வீரர்களுக்கு இணையாக பெண் வீரர்களுக்கும் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.