செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

5வது கிரிக்கெட் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா!

india vs england
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது 
 
இதனை அடுத்து தற்போது இந்திய அணி 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது இந்திய அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது என்பதும், தற்போது இந்தியா 257 ரன்கள் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணி குறைந்தபட்சம் 400 ரன்கள் முன்னணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து தெரிவித்து வருகின்றனர்