வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (09:29 IST)

நேற்று தல தோனி; இன்று கிரிக்கெட் தாதா! – வைரலாகும் வங்கபுலி!

நேற்று இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மற்றுமொறு கேப்டனின் பிறந்தநாள் ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 90ஸ் கிட்ஸ்களால் டெண்டுல்கர் பெயருக்கு பிறகு அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் சவுரவ் கங்குலி. 90களில் இந்திய கேப்டனாக கங்குலியின் பங்கு மிகப்பெரியது. எந்தளவுக்கு சிறந்த கேப்டனோ அதே அளவுக்கு மைதானங்களில் ஆவேசம் கொண்ட கேப்டனாகவும் இருந்தார் கங்குலி. 1992ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் தொடர் மூலம் அறிமுகமான கங்குலி ஆரம்பத்தில் பெரிதாக விளையாடவில்லை, என்றாலும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனது உத்வேகத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.

கடந்த 2007ம் ஆண்டில் மட்டும் 9 போட்டிகளில் விளையாடி 1024 ரன்கள் குவித்தது கங்குலியின் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. ஓய்வு பெற்ற பின்னரும் ரசிகர்கள் மனதில் இருக்கும் முக்கிய கிரிக்கெட் நாயகரான கங்குலி கிரிக்கெட் தாதா, வங்காள புலி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார். தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலிக்கு இது 48வது பிறந்தநாள்.

அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சமூக வலைதளங்களில் அவரது பெயரிலான ஹேஷ்டேகுகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.