1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Famous player who broke Virat Kohli's record

விராட் கோலியின் சாதனையை முறியடித்த பிரபல வீரர் !

Famous player
வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வ3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

அதில், முதல் ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. அதில், டாஸ் வென்ற வெஆஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்து, பாகிஸ்தானுக்கு 306 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான், 49 ஓவர்களில் 5 விக்கெட் இழ்ப்பிற்கு 306 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 103 ரன் கள் எடுத்து, ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2 முறை ஹாட்ரிக் சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார். கடன்டஹ் 2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் பாபர் அசாம் தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

எனவே சுமார் 13 போட்டிகளில் விளையாடி 1000 ரன் களைக் கடந்தவர் என்ற பெருமை பெற்றார் பாபர். இந்திய கேப்டன் விராட் கோலி 17 போட்டிகளில் 100 ரன் களைக் கடந்திருந்த நிலையில், இந்த சாதனையை பாபர் அசசாம் முறியடித்துள்ளார். அத்துடன் 87 ஒரு நாள் தொடரில் விளையாடி 17 சதங்கள் அடித்துள்ளார்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஓய்வை அறிவித்த மிதாலி ராஜ்..! பாராட்டுகளை தெரிவித்த சச்சின்!