வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (09:19 IST)

சல்லி சல்லியா நொறுக்கிடானுங்க... ரோகிணி தியேட்டரில் அட்டகாசம்!

கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலை ஷோவை காண குவிந்தனர். 

 
உலகெங்கிலுமுள்ள விஜய் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு திரையரங்குகளில் குவிந்து உள்ளனர். திரை அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே FDFS முடிந்துள்ள நிலையில் படத்தை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். ஆனால் ஆங்காங்கே சிலர் தங்களது ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
 
இந்நிலையில் சென்னையின் பிரபலாமான தியேட்டரான கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலை ஷோவை காண குவிந்தனர். பலர் டிக்கெட் இல்லாமலும் படம் பார்க்க வந்துள்ளனர். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் திரையரங்க பணியாளர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. 
 
இதனால் திரையரங்கிற்குள் நின்றுகொண்டு பார்க்கும் நிலைக்கு ஆளாகினர். இதில் சிலர் கொண்டாட்டம் எனும் பெயரில் திரையரங்கில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த LED திரைகளை உடைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.