வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (23:22 IST)

விபத்தில் துண்டான வாலிபரின் கையை கவ்விச் சென்ற நாய்

medical college
மருத்துவமனையில் விபத்தில் துண்டான வாலிபரின் கையை ஒரு நாய் கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க  மா நிலம் சிலிகிரி துர்காராம் என்ற காலணியில் வசித்தவர் சஞ்சய் சர்க்கார். இந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் சமீபத்தில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டு, அவரது வலது கை துண்டானது. இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை சிலிகுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அப்போது அவரது துண்டிக்கப்பட்ட கையும் எடுத்துச் சென்றனர்.   விரைவில் வாலிபருடைய கையை பொருத்த உள்ளதாக  மருத்துவர்கள் கூறினர்.

அப்போது, அந்த மருத்துவமனைக்குள் சுற்றித் திரிந்த  நாய் ஒன்று ஆஸ்பத்திரியின் மாடியில் இருந்து, எதையோ எடுத்துப்போவதை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு இதுகுறித்து ஊழியர்கள் கையை தேடியபோது, மருத்துவமனையி கை துண்டிக்கப்பட்ட வாலிபரின் கை என தெரியவந்தது.  அந்தக் கையை ஊழியர்கள் பிடித்து இழுத்த போது, அதில் பாதியைச் சாப்பிட்டுவிட்டது.  இதனால் உறவினர்கள் போராட்த்தில் ஈடுபட்டனர்