ஆஷஸ் நான்காவது டெஸ்ட்டிலும் சொதப்பும் இங்கிலாந்து!
ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த வருட ஆஷஸ் தொடர் ஆரம்பம் முதலே ஒரு பக்க சார்பாகவே செல்கிறது. ஆரம்பத்தில் இருந்தே ஆஸி அணி இங்கிலாந்தை அடித்து துவைத்து வருகிறது. ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகளை ஆஸி வென்று தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்துவருகிறது.
இதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி 416 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வழக்கம் போலவே சொதப்ப ஆரம்பித்தது. 100 ரன்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதையடுத்து அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ நிதானமாக ஆடி ரன்களைக் குவித்து வருகின்றனர். தற்போது வரை இங்கிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்டோக்ஸ் 51 ரன்களுடனும், பேர்ஸ்டோ 43 ரன்களும் சேர்த்து களத்தில் உள்ளனர்.