அஜித் 61 படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? வெளியான அப்டேட்!
அஜித் ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவதாக உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாம்.
அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி மாதத்தில் இந்த படத்தின் பூஜை நடக்க உள்ள நிலையில் மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.