வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (08:56 IST)

ஒரே நாளில் 7.51 லட்சம் பேருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அமெரிக்கா!

உலகம் முழுவதும் கொரோனா வீரியமடைந்துள்ள நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு உயர தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்திற்குள்ளாக சுமார் 7.51 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் மொத்த பாதிப்புகள் 5.84 கோடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2,133 பேர் உயிரிழந்த நிலையில் 8.32 லட்சமாக மொத்த பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பிரான்சில் ஒரே நாளில் 1 லட்சம் பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. வேகமாக அதிகரிக்கும் கொரோனா உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.