1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 13 நவம்பர் 2022 (13:53 IST)

இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மெல்போர்னில் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி 20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மெல்போரினில் நடக்கும் இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்பனை ஆகியுள்ளன.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி அரையிறுதிப் போட்டி போலவே பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்ஹான் அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்து தற்போது விளையாடி வருகிறது.