1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 13 நவம்பர் 2022 (08:20 IST)

இறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இங்கிலாந்து… சாம்பியன் பட்டம் யாருக்கு?

டி 20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்க உள்ளது. இதில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி 20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடக்க உள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஏற்கனவே இவ்விரு அணிகளும் 1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப் போட்டியில் மோதின. அப்போது பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. அப்போதும் அந்த தொடர் ஆஸ்திரேலியாவில்தான் நடைபெற்றது.

இந்த தொடரில் ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கினாலும், சுதாரித்த பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் உள்ளது. ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதில் உத்வேகத்தோடு இறுதிப் போட்டியை எதிர்கொள்கிறது.