தொடர்புடைய செய்திகள்
- குடியரசுத் தலைவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர்
- கார்த்தியின் ‘சுல்தான்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ்
- எ.வ.வேலு வீட்டில் வருமானவரி சோதனை: ரூ.3.5 கோடி பறிமுதல் என தகவல்!
- சூர்யா ரிலீஸ் செய்த 'அக்காலி' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
- மீண்டும் 'ஹிட்' பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..எகிறிய எதிர்பார்ப்பு
பென் ஸ்டோக்ஸ் விளாசலில்....இங்கிலாந்து அணி அதிரடி வெற்றி….
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2 வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே புனே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் 337 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 32 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்து விளையாடிய நிலையில் . ஜானி பேர்ஸ்டோ மிக அபாரமாக விளையாடி 100 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார்.
பின்னர் பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மீண்டும் இங்கிலாந்து ஃபார்மிற்கு திரும்பியுள்ளதால் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1”1 என்ற சம அளவில் உள்ளது./
அடுத்த கட்டுரையில்